சினிமா செய்திகள்

அடுத்த வாரம் வெளியாகும் துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்'

துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'அருகே அருகே' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' திரைப்படம் - ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்-  துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்த எதிர்பார்ப்பு:

இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கி இருக்கிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா - இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா - ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

'அருகே அருகே..' எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌

40-ஆவது திரைப்படம்:

துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புதிதாக வெளியான பாடல் ஆகியவை ஜேக்ஸ் பிஜாயின் இசை - ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் - ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என்பதை உணர்த்துகின்றன.

மாபெரும் வெற்றி பெற்ற லோகா படத்தை தொடர்ந்து வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் இதுவாகும். அதே போல் பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'RDX -ஆர்.டி.எக்ஸ்.' படத்திற்கு பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.