க்ரைம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படங்களை இயக்குவதில் சிறந்தவரான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பில் இயக்கத்தில் மோகன்லால்- மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தை இந்தி தயாரிப்பு நிறுவனங்களான பென் ஸ்டுடியோஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்திருந்தது.
இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்ததால், இதே கூட்டணியில் திரிஷ்யம் 2 உருவானது. இதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து திரிஷ்யம் 3 இதே கூட்டணியால் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 21-ந்தேதி (நாளை மறுதினம்) ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் மக்களிடம் இந்தப்படத்தை பற்றிய ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
"திரிஷ்யம் 3" திரைப்படம் ரிலீசுக்கு முன்பே உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த படம் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டுமே ரூ.14 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தின் முதல் பாகம் 2013-ம் ஆண்டு வெளியாகி ரூ.75 கோடி வசூலை பெற்றது. இந்த படத்தின் கதையை வைத்து தமிழில் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் 'பாபநாசம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு 'திரிஷ்யம் 2' திரைப்பம் நேரடியாக ஓடிடி யில் வெளியாகி முதல் பாகத்தை போலவே நல்ல வரவேற்பை பெற்றது.
திரிஷ்யம் 3-தான் கடைசி பகுதி. இதற்கு பிறகு தொடர்ச்சி வராது என படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.