சினிமா செய்திகள்

'டோரதி' OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு: எப்போது, எந்தத் தளத்தில் பார்க்கலாம்?

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் வரும் அக்டோபர் 23 முதல் இதனை நெட்ஃபிளிக்ஸில் பார்த்து ரசிக்கலாம்.

திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவான 'டோரதி' திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரீமியர் செய்யப்பட உள்ளது.

ஓடிடி நிறுவனம் இதுகுறித்து இன்னும் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், நெட்ஃபிளிக்ஸில் உள்ள அப்கமிங் பக்கத்தில் அக்டோபர் 23 முதல் பார்க்கலாம் எனப் பட்டியலிட்டுள்ளது.

கதைக்களம் மற்றும் இயக்கம்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சரவணன் சந்திரன் இணைந்து எழுதிய கதையை, கார்த்திக் சுப்பராஜ் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.

'டோரதி' திரைப்படம் கார்த்தி மற்றும் சுப்பு என்ற இரு நண்பர்களின் வாழ்க்கையைச் சுற்றியும், ஒரு பெண்ணைச் சந்தித்த பிறகு வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் பார்வை எவ்வாறு மாறுகிறது, அவர்களின் பயணம் எப்படி திசைமாறுகிறது என்பதையும் மையமாகக் கொண்டு ஒரு அழுத்தமான டிராமா பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்ரமணியம், கஜராஜ் மற்றும் சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு மற்றும் தயாரிப்பு

'இசைஞானி' இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்ததோடு மட்டுமின்றி, பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவுவை எஸ். திருநாவுக்கரசு, படத்தொகுப்பை கணேஷ் சிவா,தயாரிப்பு வடிவமைப்பு குமார் கங்கப்பன் மற்றும் சண்டைப்பயிற்சியை தினேஷ் சுப்பராயன் ஆகியோர் கையாண்டுள்ளனர்.

இப்படத்தைக் கார்த்திக் சுப்பராஜின் 'தம்மம் ஃபிலிம்ஸ்' பேனர் தயாரித்துள்ளது. இவருடன் இணைந்து ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் குனீத் மோங்கா மற்றும் ஆச்சின் ஜெயின், ஜோதி தேஷ்பாண்டே ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

விமர்சனம்

இந்தத் திரைப்படம் குறித்த விமர்சனத்தில், "இந்த மூச்சுத்திணற வைக்கும் விண்வெளியிலும், மன்னிக்காத உலகிலும் 'டோரதி' திரைப்படம் இந்த அளவிற்கு ஒரு சவாலான வடிவத்தில் வெளிவந்திருப்பதே, வன்முறையை ஏற்பதற்கு எதிரான மிகப்பெரிய சவாலாகும்" என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் வரும் அக்டோபர் 23 முதல் இதனை நெட்ஃபிளிக்ஸில் பார்த்து ரசிக்கலாம்.

SCROLL FOR NEXT