சினிமா செய்திகள்

பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க..!- நடிகர் மன்சூர் அலிகான்

திரும்பத் தேர்தல் வைத்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

என்ன இது ரொம்ப அநியாயம் பண்ணிட்டு இருக்கிறார்களே. விஜயை கூப்பிட்டு சிஎம் சீட்டில் உட்கார வையுங்கள்.. நாட்டில் எந்த வேலையும் நடக்க மாட்டிங்குது..

ஆட்டுக்கு தாடியும்.. நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை என்பதுபோல்.. எந்த கவர்னர் வந்தாலும் இப்படிதான் செய்கின்றனர்.

இனி சும்ரீம் கோர்ட், ஐ கோர்ட் நீதிபதிகளை கொண்டு தான் பதவி பிராமணம் செய்து வைக்க வேண்டும்.

பரிசம்போட்டு நிச்சயதார்த்தம் செய்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் வைப்பதுபோல்.. தேர்தல் முடிவுகள் வந்து 5 நாட்கள் ஆகிற நிலையில் இன்னும் ஆட்சியமைக்கவில்லை.

இப்படியே போச்சுனா பரோட்டா சூரி காமெடி மாதிரி

கோட்ட அழிக்க வைக்காதீங்க. திரும்பத் தேர்தல் வைத்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.