நயன்தாரா 
சினிமா செய்திகள்

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு அட்டைப்பட படப்பிடிப்பிற்காக என்னை அணுகினார்கள்.

மாடலாக பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு பத்திரிகையில் என்னுடைய அட்டை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சத்யன் அந்திக்காடு 2003-ல் வெளியான மனசினக்கரே படத்திற்காக என்னை தொடர்பு கொண்டார். அதுதான் என் முதல் திரையுலக அனுபவமாக இருந்தது என்றார்.

ஹீரோக்களை மட்டுமே நம்பி இருந்த சினிமாத் துறையில் ஹீரோயின்களுக்கும் தனி ரசிகர் படையை உருவாக்கியவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் ஆகிய பரிமாணங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையிலும் இன்னும் முன்னணி கதாநயகியாக ஜொலித்து வருகிறார். அவரது நடிப்பில் டாக்ஸிக் 26-ந்தேதியும், ‘ஹாய்’ படம் 28-ந்தேதியும் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை மற்றும் சம்பளம் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு அட்டைப்பட படப்பிடிப்பிற்காக என்னை அணுகினார்கள். அதில் நான் பங்கேற்றதற்காக எனக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை சம்பளமாக தந்தனர்.

அதற்கு முன்பு ஒரு சம்பளம் வாங்கினேன். அது என்னவென்றால் குழந்தை பருவத்தில் என் தந்தையின் நகத்தை வெட்டியதற்காக எனக்கு ரூ.500 கிடைத்தது. ஆரம்பத்தில் நான் சினிமாவில் நடிப்பதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை. மாடலாக பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு பத்திரிகையில் என்னுடைய அட்டை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சத்யன் அந்திக்காடு 2003-ல் வெளியான மனசினக்கரே படத்திற்காக என்னை தொடர்பு கொண்டார். அதுதான் என் முதல் திரையுலக அனுபவமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.