கீர்த்தி சுரேஷ் 
சினிமா செய்திகள்

அடேங்கப்பா... ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

குடும்பப் பாங்கான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ், திடீரென குத்துப்பாடலுக்கு நடனமாடச் சம்மதித்திருப்பது அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒப்பந்தம்

இந்த நிலையில், தெலுங்குத் திரையுலகில் மீண்டும் ஒரு சுவாரசியமான திருப்பமாக, நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்பு குத்துப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் மாஃபியா பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'தி பாரடைஸ்' படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் 2 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், அந்த 4 நிமிட பாடலுக்காக அவருக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

குடும்பப் பாங்கான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ், திடீரென குத்துப்பாடலுக்கு நடனமாடச் சம்மதித்திருப்பது அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "கீர்த்தி சுரேஷ் படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடனமாடுவது உண்மைதான். படத்தின் கதைக்களத்தில் மிகவும் முக்கியமான சூழலில் இந்த பாடல் வரும். ஆனால், அவரது சம்பளம் குறித்த விவரங்களை இப்போது சொல்லமுடியாது" என்று தெரிவித்தனர்.