சினிமா செய்திகள்

'மதயானை கூட்டம்' படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்

அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை மலர்

மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.