சினிமா செய்திகள்

உடல்நிலையில் முன்னேற்றம் - 'டிஸ்சார்ஜ்' ஆனார் டைரக்டர் பாரதிராஜா

நுரையீரல் தொற்று காரணமாக பாரதிராஜா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பாரதிராஜா உடல்நிலை குறித்த வதந்திகளும் அவ்வப்போது பரவி வந்தது.

மாலை மலர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேவேளை அவரது உடல்நிலை குறித்த வதந்திகளும் அவ்வப்போது பரவி வந்தது. இதற்கிடையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

பாரதிராஜா 'டிஸ்சார்ஜ்' ஆன தகவல் திரையுலகினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.