சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு - DHE PUTTU’ எனும் பெயரில் புதிய கேரள கலாச்சார பாணியிலான உணவகத்தை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் - காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வழங்கும் வகையில், சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘தி புட்டு - Dhe Puttu’ உணவகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நடிகர்கள் அசோகன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான், நடிகைகள் மீனா, ஷாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய், சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், இயக்குநர் பிரியதர்ஷன், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார், பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன், நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன் மாஸ்டர், மாஃபியா சசி மாஸ்டர், ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஞ்சன், டாக்டர் சைதன்யா, டாக்டர் கே. கிரீஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.