தர்மன்
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் பட புதிய போஸ்டர்: அடுத்த அப்டேட் குறித்தும் தகவல்

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை கமல்ஹாசன் நிறுவனம் தயாரிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்ரீலீலா இணைந்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

தீபாவளி போஸ்ட்

இந்த நிலையில் தீபாவளி நாளான இன்று ரஜினி ரசிகர்களுக்காக இயக்குநர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்பின் "தலைவரின் தோற்றம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்! அடுத்த அப்டேட்- டிசம்பர் 12. இப்போதைக்கு விடைபெறுகிறேன்! மீண்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT