சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தப் படம் தர்மதுரை. ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஆக.19ம் தேதி வெளியான இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போதுவரை இப்படம் ரசிகர்கள் பேசப்பட்டும், இப்படம் தொடர்பான கருத்துகள் பகிரப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் இன்றோடு படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இயக்குநர் சீனு ராமசாமி ஒரு சமூக வலைதளப் பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்.,
“ஒரு படம் மக்கள் மனதில் எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்கிறது என்பதே அதன் வெற்றி அல்லது தோல்வியை தீர்மானிக்கிறது என்பது என்னுடைய நிலைப்பாடு. உங்களது அளப்பரிய அன்பினால், தர்மதுரை படம் இன்று தனது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய ஆர்.கே.சுரேஷ் மற்றும் அவரது அண்ணன் வெங்கட் ஆகியோருக்கும், தங்கள் கலைத்திறனால் இப்படத்திற்கு உயிர் கொடுத்த ஒவ்வொரு திறமையான கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.