சினிமா செய்திகள்

‘தமிழ் முருகன்’ படத்தின் தனுஷின் தோற்றம் வெளியீடு!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'தமிழ் முருகன்' படத்தில் தனுஷின் தோற்றம் வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் போன்ற படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதியப் படம் தமிழ் முருகன்.

அறிவுமதி எழுதியுள்ள இப்படத்தை, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இது ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று படத்தின் தனுஷின் கதாபாத்திரம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

SCROLL FOR NEXT