சினிமா செய்திகள்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; 'மெய்யழகன்' படத்திற்குப் பாராட்டு!

தமிழ் திரைப்படமான 'மெய்யழகன்' படத்தின் ஒலிக்கலவைக்காக 'சுரேன்'க்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

2024 ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் இதில் வழங்கப்படுகின்றன. அதில், மகாராஜா, மெய்யழகன், அமரன் போன்ற திரைப்படங்களும், மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ், பிரம்யுகம், மற்றும் தெலுங்கில் கல்கி போன்ற படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வெல்லும் கடுமையான போட்டியில் முன்னிலையில் இருந்து வந்தன.

சிறப்பு விருது (ஒலிக்கலவை):

இந்நிலையில் தமிழ் திரைப்படமான 'மெய்யழகன்' (special mention) படத்திற்காக 'சுரேன்'க்கு சிறப்பு விருது (Sound Design) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட மத்திய நடுவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் படங்களை மதிப்பீடு செய்து இந்த விருதுகளைத் தேர்வு செய்துள்ளனர்.

சிறந்த நடிகர் தனுஷ்:(கேப்டன் மில்லர்)

2024 ம் ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான(special mention) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் படம்:(ராயன்)

தமிழில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.