சினிமா செய்திகள்

ரஜினிகாந்த், சூர்யாவுடன் மோதுவதை தவிர்த்து ஒதுங்கிய தனுஷ் - ‘ஓம்’ படம் வெளியீடு தள்ளிவைப்பு!

படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

ஓம்’ படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“இதுபோன்ற சூழலில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றுவதில் பல்வேறு சவால்கள் உள்ளன.

பல ஆண்டுகளாக நாம் அனைவரும் பெரிதும் மதித்து, கொண்டாடி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம், எங்கள் படத்திற்கு முந்தைய நாளான அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது.

அவர் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக, எங்கள் திரைப்படமான ‘ஓம்’-இன் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அதே சமயம், சூர்யாவின் திரைப்படம் அதே தேதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டும் தீபாவளிக்கு எங்கள் படம் வெளியாகாது.

நியாயமாகச் சொல்லப்போனால், அவர்கள்தான் தங்கள் வெளியீட்டுத் தேதியை முதலில் அறிவித்தார்கள்; சினிமா மற்றும் இத்துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலுடனும் ஒருவருக்கொருவர் முடிவுகளை மதித்தும் செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எங்கள் புதிய வெளியீட்டுத் தேதியை மிக விரைவில் அறிவிப்போம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம் படம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மலையாள சூப்பர்ஸ்டார் மமூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஓம்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் அக்.16ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்டோபர் 15 அன்று வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்துடனான மோதலைத் தவிர்க்கவும், தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’படத்திற்கு வழிவிடவும், வெளியீட்டை தள்ளிவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT