சினிமா செய்திகள்

Karuppu | முதல் நாள் காட்சிகள் ரத்து... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் தனுஷ்!

கருப்பு திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கருப்பு. பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் இன்று (மே 14) உலகமெங்கும் வெளியாக இருந்தது. எனினும், கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சி (காலை 09 மணி) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, " தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என குறிப்பிட்டு இருந்தார்.

சிறப்பு காட்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று முழுக்க திரைப்படம் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்தப் படத்தின் ரிலீஸ் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், நடிகர் தனுஷ் கருப்பு ரிலீஸ் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "சூர்யா சாரும் கருப்பு திரைப்படும் ஒரு முறையான திரையரங்கு வெளியீட்டிற்கு தகுதியானவர்கள். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.