சினிமா செய்திகள்

டிமான்டி காலனி 2 ரிலீஸ் அப்டேட் வெளியீடு

டிமான்டி காலனி 2 படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்தார்.

இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.