இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இந்தப் படமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக மாறியது.
உலகளவில் டிமான்டி காலனி 2 திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தையும் உருவாக்கி இருக்கிறது. இந்தப் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
அருள்நிதி, பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் டிமான்டி காலனி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.