சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே கர்ப்பம்.. அப்போ 'ராக்கா' படப்பிடிப்பு? - அட்லீ எடுத்த முடிவு

தீபிகா படுகோனே சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைக்க கூடாது என்பதில் அட்லீ திட்டவட்டமாக இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ, தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் 'ராக்கா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் அல்லு அர்ஜூன் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தில் அல்லு அர்ஜூனுக்கு இணையாக தீபிகா படுகோனே கதாபாத்திரமும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தீபிகா படுகோனே சமீபத்தில் அறிவித்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் குறைக்கப்படலாம் என்று பேசப்பட்டது.

ஆனால் தீபிகா படுகோனே சம்பந்தப்பட்ட காட்சிகளை குறைக்க கூடாது என்பதில் அட்லீ திட்டவட்டமாக இருக்கிறாராம்.

இதனால் ஆக்ஷன் காட்சிகளில் 'பாடி டபுள்' முறையில், அதாவது 'டூப்' வைத்து சமாளிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்காக தீபிகா படுகோனே போல உருவத்தில் ஒற்றுமையாக இருக்கும் 3 பெண்களை தேர்வு

செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் தவிர இதர காட்சிகளில் தீபிகா படுகோனே வழக்கம்போல நடிப்பார் என்று கூறப்படுகிறது.