சினிமா செய்திகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - இன்ஸ்டாவில் பதிவிட்ட தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வு குறித்தான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது நடிகை தீபிகா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு நிறைமாத கர்ப்பிணி பெண்கள், தாங்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்தான வீடியோ ஒன்றை, நடிகை தீபிகா படுகோனே இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்தான அந்த வீடியோ பதிவில், ஒரு கர்ப்பிணி பெண் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டே கழிவறைக்கு வேடிக்கையாக நடந்து செல்லும் வீடியோ இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்த வீடியோவில், “கர்ப்பத்தின் மூன்றாவது மாதங்களில், இரவில் கழிவறைக்கு செல்ல எழுவது” என்று எழுதியிருந்தது.

நடிகையின் இந்த பதிவிற்கு, சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை கூறி நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.