DC 
சினிமா செய்திகள்

தரமான செய்கை.. அனிருத் இசையில் லோகேஷ் நடித்த 'டிசி' படத்தின் மியூசிக் ஆல்பம் வெளியீடு

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தை பார்வையிட்டு 'A' சான்றிதழ் வழங்கியது.

மாநகரம், கைதி, விக்ரம், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு 'DC' என பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

டிரெய்லர்

லோகேஷ் 'தேவதாஸ்' கதாபாத்திரத்திலும், வாமிகா 'சந்திரா' கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படத்தின் 'பிளடி வாலண்டைன்' ப்ரோமோ காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

மே 15 அன்று DC படத்தின் ரத்தம் தெறிக்கும் வகையிலான மிரட்டல் டிரெய்லர் வெளியானது.

அருண் மாதேஸ்வரனின் சாணி காயிதம் போலவே இப்படமும் அதீத வன்முறையான கதைக்களம் மற்றும் காட்சியமைப்பில் நகர்கிறது.

ரிலீஸ்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தை பார்வையிட்டு 'A' சான்றிதழ் வழங்கியது.

டிசி படம் ஜூலை 31 அன்று வெளியாகும் என முதலில் கூறப்பட்டிருந்த நிலையில் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 7 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

பாடல்கள்

‘டிசி’ படத்தின் ‘பூம் பா டிகா டிகா’ பாடல் அண்மையில் வெளியாகிருந்தது. அனிருத், வேடன் இணைந்து பாடிய இப்பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் எழுதியுள்ளனர்.

அடுத்ததாக வெளியான 'ராகா ஆப் ரிவெஞ்’ , மற்றும் ‘ஹேங் ஓவர்’ பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘டிசி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அனைத்து பாடல்களையும் சன் பிக்ர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. படத்தின் 15 பாடல்களையும் ஆல்பமாக படக்குழு வெளியிட்டுள்ளது.