ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் 'லாக்டவுன்'. கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், மழை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.
ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், விரைவில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், லாக்டவுன் படம் வெளியாகும் புதிய தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லாக்டவுன் படம் வரும் 12ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதேநாளில், கார்த்தி நடிப்பில் நேற்று வெளியாக இருந்த வா வாத்தியார் படமும் வரும் 12ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mark the date! ?️ #Lockdown ⚡️ hits theatres on December 12th. The countdown restarts. ?#LockdownInCinemasDec12@anupamahere #ARJeeva @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #PriyaaaVenkat @shakthi_dop @NRRaghunanthan @sidvipin @EditorSabu @sherif_choreo #SriGirish… pic.twitter.com/HDgQKwOspV