சினிமா செய்திகள்

"கூலி" திரைப்படத்தில் இணையும் பிரபலம் யார் ?- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது.

முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் பிரபலமான சவுபின் ஷாஹிர், கூலி படத்தில் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூலி படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வரும் நிலையில், யார் யார் இப்படத்தில் நடித்துள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.