சினிமா செய்திகள்

Confessions On A Dance floor II: நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையுலகில் மடோனா மறுபிரவேசம்!

செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டார்.

அமெரிக்காவின் பிரபல பாப் இசை நட்சத்திரம் மடோனா. தற்போது அவருக்கு வயது 67.

2019 இல் Madame X பாடல் ஆல்பத்தை வெளியிட்ட அவர் அதன் பின் இசை உலகில் இருந்து ஓய்வில் இருந்தார்.

2023 இல் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டார். அதன் பிறகு 2024 இல் அவரது இளைய சகோதரர் கிறிஸ்டோபரை உயிரிழப்பு அவரை சோகத்தில் ஆழ்த்தியது.

இசையுலகிற்கு மீள்வருகை

இந்நிலையில் 7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மடோனா மீண்டும் இசையுலகிற்கு திரும்பியுள்ளார்.

மடோனா, தனது 15-வது ஸ்டூடியோ ஆல்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2005இல் வெளியாகி ஹிட் ஆன Confessions On A Dance floor ஆல்பத்தின் 2ஆம் பாகமாக இது அமைய உள்ளது. ஆல்பத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஸ்டூவர்ட் பிரைஸ் உடன் மடோனா மீண்டும் இந்த ஆல்பத்திற்கு இணைந்துள்ளார்.

நேற்று இந்த ஆல்பத்தின் அட்டைப்படம் வெளியிடப்பட்டது. ஆல்பம் ஜூலை 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் ஆல்பத்தின் 1 நிமிட வீடியோவையும் மடோனா வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆல்பத்தில் மற்றொரு பிரபல பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் உடன் மடோனா பணியாற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2003 ஆம் ஆண்டு Me Against the Music என்ற பாடல் மூலம் மடோனா - பிரிட்னி ஸ்பியர்ஸ் உலகையே அதிர வைத்தது.