சினிமா செய்திகள்

'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்திற்கு தேதி குறிச்சாச்சு!

ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும்.

நாய் சேகர் புகழ் கிஷோர் ராஜ்குமார் இயக்கிய 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படம் டிசம்பர் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. காதல், நகைச்சுவை நிறைந்த கதை, அன்னா பென் நடித்திருக்கும் முக்கியமான கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாய் சேகர் பட புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை'. படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

கலகலப்பான படம்

படம் குறித்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் கூறுகையில், காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. பாக்யராஜ் படங்களைப் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த ஏக்கத்தை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும். ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் திறமையான நடிகை. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

இந்த நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 24-ந்தேதி முதல் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தை திரையரங்குகளில் காணலாம்.

SCROLL FOR NEXT