விஜய் ஆண்டனி 
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியுடன் இணைந்த 3 முன்னனி இயக்குனர்கள்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து வருகிறார்.‘ரத்தம்’ திரைப்படத்தின் டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மாலை மலர்

நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறன் - பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

வெற்றிமாறன் - பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

இந்த படத்தின் டீசர் வரும் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முன்னனி இயக்குனர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 'ரத்தம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.