சினிமா செய்திகள்

இன்று வெளியாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ரிலீஸ் டிரெய்லர்

பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.

பெருசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.