சினிமா செய்திகள்

ராம் சரண் ரசிகரால் 'பெத்தி' பட விழாவில் பரபரப்பு

"இவ்விழாவில் ஜான்வி கபூர் தெலுங்கில் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது"

நடிகர் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழா ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராம் சரணைப் போலவே தோற்றமளித்த ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையை நோக்கி ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர் மேடையை நோக்கி விரைந்தபோது, ராம் சரணின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான கெவின் குன்டா உடனடியாக தலையிட்டு அவரை தடுத்து அப்புறப்படுத்தினார். இதனைக்கண்டு அருகில் இருந்த ஜான்வி கபூர் அதிர்ச்சி அடைந்தார். எனினும், அந்த ரசிகரின் முயற்சி வீணாகவில்லை. அவருக்கு ராம் சரணை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நடிகரை சந்தித்த ரசிகர் உணர்ச்சிவசப்பட்டு நன்றி தெரிவித்து, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், விழாவில் ஜான்வி கபூர் தெலுங்கில் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள 'பெத்தி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.