சினிமா செய்திகள்

பல்டி அடித்த கார்.. பதறவைக்கும் CCTV காட்சி - 30 வயது நடிகை பரிதாப பலி

மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காரைத் தூக்கி நிறுத்தி ஹர்ஷிலை மீட்டனர்.

மாலை மலர்

ராஜஸ்தானை சேர்ந்த நடிகையும் மாடலுமான ஹர்ஷில் காலியா (30) ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

திங்கட்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில், ஹர்ஷில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில் அவரது கார் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வளைவில் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது.

மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காரைத் தூக்கி நிறுத்தி ஹர்ஷிலை மீட்டனர்.

பலத்த தலைக்காயங்களுடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

30 வயதான ஹர்ஷில் காலியா, 2021 ல் 'மிஸ் திவா ராஜஸ்தான்' போட்டியில் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் ஆவார்.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'க்ரைம் நெக்ஸ்ட் டோர்' என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.