பெரிய தொழிலதிபரின் மகள் ரோஸ்மின். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த ராணவ்-க்கு தனது நிறுவனத்திலேயே வேலை ஏற்பாடு செய்து தருகிறார். இருவரிடையே ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறுகிறது.
திருமணம் செய்துக்கொள்ள இருவரும் முடிவெடுக்கின்றனர். ஆனால், ரோஸ்மின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை.
தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவ்-ஐ திருமணம் செய்துகொள்ளும் ரோஸ்மின், தனது பதவியை கணவருக்கு வழங்கி விடுகிறார்.
இனிமையாக செல்லும் இவர்களின் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினை ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் இருவரும் பிரிய முடிவு எடுக்கிறார்கள்.
இருவரும் கவுன்சிலிங்கிற்கு செல்கிறார்கள் அங்கு மற்றொரு கதாநாயகன்- கதாநாயகியின் கதை கூறப்படுகிறது.
கதைக்குள் கதை என்பது போல் ரியல் மற்றும் ரீல் ஜோடிகள் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பது படத்தின் மீது கதை.