குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2005ம் ஆண்டு பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக ஹேமந்த் நாகின்தாஸ் மோடி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மோடிக்கு கடந்த 2014ம் ஆண்டு 30 நாள் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த மோடி, தனது அடையாளத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.
அமிதாப் பச்சன் மற்றும் ரன்வீர் சிங் போன்ற நடிகர்களுடன் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் ஜெயேஷ்பாய் ஜோர்தார் உள்ளிட்ட படங்களில் மோடி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தலைமறைவான மோடியை தீவிரமாக தேடி வந்த அகமதாபாத் போலீசார், கீகாந்தா மெட்ரோ நிலையம் அருகே 12 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.