சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தாயார் காலமானார்!

கிருஷ்ணா முகர்ஜி ஒரு பின்னணிப் பாடகி ஆவார்.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயாரும், பின்னணி பாடகியுமான கிருஷ்ணா முகர்ஜி (75) இன்று மதியம் காலமானார்.

பெங்காலி திரையுலகில் பணியாற்றியுள்ள இவர், ஃபில்மாலயா ஸ்டுடியோஸின் நிறுவனர்களில் ஒருவரான திரைப்பட இயக்குநர் ராம் முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார். ராம் முகர்ஜி 2017-ல் காலமானார்.

ராணி முகர்ஜியின் திரைப்பட வாழ்வில் அவரின் தாயாரின் பங்கு மிக முக்கியமானது. இதனை பல நேர்காணல்களில் ராணி முகர்ஜி பதிவு செய்துள்ளார்.

கிருஷ்ணா முகர்ஜி மறைவு தொடர்பாக குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி (75) இன்று மதியம் காலமானார் என்பதை கணத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த துயரத்தின்போது உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவிற்கு அக்குடும்பத்தினர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். மேலும், இந்த நேரத்தில் அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT