மும்பை:
பாலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரது மகன் அபிஷேக் பச்சனும், மருமகள் ஐஷ்வர்யா ராயும் பாலிவுட்டில் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே, 81 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், அமிதாப் பச்சனுக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் தான் உண்மையில் அபிஷேக் பச்சனுடன் ஐஎஸ்பிஎல் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படவில்லை என அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்தார். நலமுடன் இருக்கிறேன். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தி போலியானது என்றார்.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது