சினிமா செய்திகள்

மலையாளத்தில் மெகா வெற்றியை தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியானது

காதல், நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கிரிஷ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது.

‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்க இருந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி. இயக்கிய புதிய திரைப்படம் தான் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

இந்தப் படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் டிரெய்லர் வெளியீடு:

பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படம் வரும்கிற செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் வசூல்:

மலையாளத்தில், இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இந்தப் படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ.72 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.