மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின் பாலி மற்றும் திரையுலகின் இளம் நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள "பெத்லகேம் குடும்ப யூனிட்" திரைப்படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்தத் திரைப்படம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி கதாபாத்திரங்களில் நிவின் பாலி (ஜஸ்டின்) மற்றும் மமிதா பைஜூ (ஆஷ்லி) இவர்களுடன் துணைக் கதாபாத்திரங்களில் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பணிக்கர், ஸ்ரிந்தா மற்றும் மீனாட்சி ரவீந்திரன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
'பிரேமலு' திரைப்படத்தின் மெகா வெற்றிக்குக் காரணமான அதே தொழில்நுட்பக் கூட்டணி மறுபடியும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது. கிரிஷ் ஏ.டி-யுடன் இணைந்து கிரண் ஜோசி இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.
அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். விஷ்ணு விஜய் இசையமைப்பில் வெளியான 'மாந்திரீகம்' மற்றும் 'இல்லே இல்லா' ஆகிய பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி தணிக்கைக் குழுவால் 'UA 13+' சான்றிதழ் பெற்றுள்ளது.
நாளை வெளியாகும் இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் BookMyShow தளத்தில் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.