சினிமா செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை... இயக்குநர் செல்வராகவன்

படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும்.மென்டல் மனதில் திரைப்படம் இந்த ஆண்டே திரைக்கு வரும்.

இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் செல்வராகவன் மென்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலணி 2 படங்களை இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்த சமீபத்திய பேட்டியில் தான் இயக்கும் புதிய படங்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், "புதுப்பேட்டை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாவது என் கையில் இல்லை. இந்தப் படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால், அது எளிமையானது தான்."

"7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் திரைப்படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரும். இதுதவிர புதிதாக கதை ஒன்றை எழுதி வருகிறேன்," என்றார்.