சினிமா செய்திகள்

தமிழில் ஆவேசம்: ஓடிடி-ல் வரும் 21 ஆம் தேதி வெளியாகிறது

உலகளவில் இதுவரை ஆவேஷம் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

உலகளவில் இதுவரை ஆவேஷம் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வருகின்றனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் மே 9-ம் தேதி வெளியானது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வரும் 21-ம் தேதி 'ஆவேஷம்' படத்தை தமிழில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.