அவதார் 4 
சினிமா செய்திகள்

உருவாகிறது 'அவதார் 4'.. எப்போது ரிலீஸ்?

மூன்று ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது.

அவதார் 4 படம் உருவாதை உறுதி செய்யும் விதமாக டிஸ்னி நிறுவனம் அப்படத்தின் ரிலீஸ் தேதியை தனது பட்டியலில் சேர்த்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து

அவதார் படவரிசையில் மூன்றாம் பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டவில்லை என கருதப்படுகிறது.

அவதார் 4

அதிகரித்து வரும் விஷுவல் எபெக்ட்ஸ் செலவுகள் லாப வரம்புகளை மேலும் சுருக்கி வருவதாக ஜேம்ஸ் கேமரூன் சுட்டிக்காட்டினார்.

எனவே முதல் மூன்று படங்களை விட எதிர்காலப் பாகங்களை மிகவும் மலிவாகவும், குறுகியதாகவும் உருவாக்குவது குறித்து டிஸ்னி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் 'அவதார் 4' குறித்த நிச்சயமற்ற சூழல் இருந்து வந்தது. இந்த படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்குவதாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

2022ல் எம்பயர் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர், "காலப்போக்கில், நான் நம்பும் ஒரு இயக்குநரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவேன் என்று நினைக்கிறேன். அல்லது அடுத்த பாகமே இல்லாமலும் போகலாம் என்று கூறியிருந்தார்.

ரிலீஸ்

இந்நிலையில் அவதார் 4 படம் உருவாதை உறுதி செய்யும் விதமாக டிஸ்னி நிறுவனம் அப்படத்தின் ரிலீஸ் தேதியை தனது எதிர்கால படவரிசை பட்டியலில் சேர்த்துள்ளது.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற டிஸ்னி நிறுவன நிகழ்வில் இது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அவதார் 4 திரைப்படத்தை 2029 டிசம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல அவதார் 5 திரைப்படத்தை 2031 டிசம்பர் 19 அன்றும் வெளியிட எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவதார் முதல் மூன்று திரைப்படங்கள் மூலம் உலகளவில் சுமார் 6.75 பில்லியன் டாலர்கள் வசூலித்ததுடன், முதல் பாகத்திற்காக கலை இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகியவற்றுக்கான மூன்று ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது. இது டிஸ்னி பிளஸ் தளத்திலும், ஸ்ட்ரீமிங் சாதனைகளை படைத்துள்ளது.

SCROLL FOR NEXT