சினிமா செய்திகள்

அட்லீ இயக்கத்தில் 'ராக்கா': மிக விரைவில் சிறந்த அப்டேட் வெளியாகும் என நடிகர் அல்லு அர்ஜுன் உறுதி!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார்.

இயக்குநர் அட்லீ தனது பிரம்மாண்டமான இயக்கத்தின் மூலம் உலகத் தரத்திலான திரைப்படங்களை வழங்குவதில் வல்லவர் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுடன் அவர் கைகோர்த்துள்ளதால், 'ராக்கா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் எப்போதோ உச்சத்தைத் தொட்டுள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ராக்கா' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், படத்தின் அப்டேட் தாமதமாவதற்கான காரணத்தையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசியுள்ளார்.

'ராக்கா' படம் குறித்த அறிவிப்பு வெளியாக தாமதமாகியுள்ளதை தான் நன்கு அறிவேன் என்று குறிப்பிட்ட அல்லு அர்ஜுன், தாமதமானாலும் படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று தெளிவுபடுத்தினார். "நாங்கள் எப்போது அப்டேட் கொடுத்தாலும் அது சினிமா வட்டாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். அதன்பிறகு அந்தப் படத்தைப் பற்றிய விவாதங்களுக்கு வேறு எந்தத் தளமும் தேவையில்லாத வகையில் அது அமைய வேண்டும்" என்று அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார். மேலும், ரசிகர்கள் காட்டி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் பொறுமைக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன்

தென்னிந்தியாவின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார். முழுக்க முழுக்க சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் ஃபேன்டசி பாணியில் உருவாகும் இப்படத்திற்காக அதிநவீன மோஷன்-கேப்சர் மற்றும் உயர்தர விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் மிகவும் கவனமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

கவனம் ஈர்க்கும் கூட்டணி

இயக்குநர் அட்லீ தனது பிரம்மாண்டமான இயக்கத்தின் மூலம் உலகத் தரத்திலான திரைப்படங்களை வழங்குவதில் வல்லவர் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுடன் அவர் கைகோர்த்துள்ளதால், 'ராக்கா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் எப்போதோ உச்சத்தைத் தொட்டுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிறப்பு விடியோ அறிவிப்புக்காக கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.

SCROLL FOR NEXT