சினிமா செய்திகள்

அதர்வா பகிரும் ‘டயட்' ரகசியம்

முதலில் முட்டை தான் காலையில் சாப்பிட்டு வந்தேன், இப்போது பழைய சாதம் தான்.

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார். 'பாணா காத்தாடி' மூலம் கதாநாயகனாக சினிமாவில் நுழைந்த அதர்வா 'பரதேசி', 'சண்டிவீரன்', 'இமைக்கா நொடிகள்', 'பராசக்தி' என வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார். தற்போது அதர்வா நடிப்பில் 'இதயம் முரளி' படம் வெளியாகவுள்ளது.

கட்டுக்கோப்பான உடற்கட்டு கொண்ட நடிகர்களில் ஒருவரான அதர்வா, தனது 'டயட்' குறித்து பேசியுள்ளார்.

அதர்வா கூறும்போது, ''நான் எனது சாப்பாட்டை மாற்ற மாட்டேன், எல்லா நாளும் ஒரே சாப்பாடு தான். முதலில் முட்டை தான் காலையில் சாப்பிட்டு வந்தேன், இப்போது பழைய சாதம் தான். மதியம் சிக்கன், காய்கறி எடுத்துக்கொள்வேன். இரவு 7 மணிக்கு சாப்பிட்டு விடுவேன்.

காலை, மதியம் 'டயட்' சாப்பாடு என்றாலும் இரவு தோசை தான்'' என குறிப்பிட்டார்.