சினிமா செய்திகள்

ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் X' - வெளியான புது அப்டேட்

படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் X. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.