சினிமா செய்திகள்

தங்கலான் படத்தின் `அறுவடை' பாடல் வெளியானது

தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அறுவடை என்ற பாடலின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது படத்தின் அடுத்த பாடலான அறுவடை என்ற பாடலின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பண்னையாரின் நிலத்தில் அறுவடை செய்துக் கொண்டே அவரவர் காதலியைப் பார்த்து பாடக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

படத்தை குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.