சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்?- யார் அந்த பெண்...

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கான் சிட்டி’.

தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள் முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். இவர் ‘கைதி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ , ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

அர்ஜுன் தாஸின் மிக முக்கிய அடையாளமே அவரது கம்பீரமான, தடிமனான மிடுக்கான பேஸ் குரல் ஆகும். இது அவரது வில்லன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு பெரும் பலமாக அமைந்தது. ‘கைதி’ திரைப்படத்தில் நடித்த சிறந்த வில்லன் நடிப்பிற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருது மற்றும் பல சினிமா விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் பவன் கல்யாணுடன் இணைந்து தெலுங்கில் ஓஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், ஜூன் 26-ந்தேதி முதல் திரையரங்குகளில் ‘கான் சிட்டி’ வெளியாக உள்ளது. இதையடுத்து அர்ஜுன் தாஸ் யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? அது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்த்துக் கொண்டு ரசிகர்களுக்கு அவரது திருமணம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் படி, நடிகர் அர்ஜுன் தாஸ், இந்த வாரம் நடைபெறும் ஒரு தனிப்பட்ட விழாவில், நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்தம், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் அர்ஜுன் தாஸ் ஒரு நடிகையை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், திருமணம் குறித்த செய்தி வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் மணப்பெண் அந்த நடிகையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.