சினிமா செய்திகள்

பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான்: "ஆஸ்கர் நாயகனாலும் தப்பிக்க முடியாது" என ரசிகர்கள் கிண்டல்!

டிராஃபிக்கில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் காரில் இருந்தபடி ரசிகர்களுக்கு புன்னகையுடன் கையசைத்தார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெங்களூரு நகரின் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற இசை கச்சேரி ஒன்றை முடித்துவிட்டு அவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனோஜ் குமார் என்ற ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

வைரல் வீடியோ விவரங்கள்

அந்த வீடியோவில், ஏ.ஆர். ரஹ்மான் தனது காரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பாதுகாப்பாக வந்த பாதுகாவலர்களின் வாகனமும் அவருடன் டிராஃபிக்கில் மாட்டி நிற்கிறது.

கார் டிராஃபிக்கில் நின்றபோது, சுற்றியிருந்த ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு ஆரவாரம் செய்தனர். ஏ.ஆர். ரஹ்மான் புன்னகையோடு அவர்களுக்கு கையசைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வலைவாசிகளின் கமெண்ட்டுகள்

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பெங்களூரு டிராஃபிக்கை வாரி சுருட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். "பெங்களூரு டிராஃபிக் விஐபி, ஆஸ்கர் வின்னர் என்று யாரையும் பார்க்காது, அனைவருக்கும் சமமானது" என்றும், "டிராஃபிக் கஷ்டம் என்பது எல்லாருக்குமே பொதுவானதுதான்" என்றும் நெட்டிசன்கள் வேடிக்கையாகப் பதிவிட்டு வருகின்றனர்.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் பெங்களூரு டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT