சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் புது படம் குறித்து வெளியான First Look போஸ்டர்

இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசை மற்றும் எடிட்டிங் ஆகிய பொறுப்புகளையும் ஏற்று தயாரித்தும் வருகிறார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது இயக்குநர் சசி இயக்கத்தில் ‘நூறு சாமி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையே, ‘நூறு சாமி’ படத்தை முடித்துவிட்டு மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசை மற்றும் எடிட்டிங் ஆகிய பொறுப்புகளையும் ஏற்று தயாரித்தும் வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கையில் இப்படம் தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படத்திற்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில் ப்ரீத்தி அஸ்ரானி, ஹரி பிரியா, அருவி மதன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘அப்பா குட்டி’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ‘அயோத்தி’ இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.