சினிமா செய்திகள்

ஒரு கையில் சுருட்டு மறு கையில் வெட்டிய தலை - ரத்தம் தெறிக்கும் violence படத்தில் அனுஷ்கா

நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

மலைப்பிரதேசத்தில் கதைக்களம் அமைந்துள்ளது. ஒரு பேருந்தில் அனுஷ்கா கத்தியால் ஒருவரை கழுத்தை அறுத்து கொன்று. வெட்டிய தலையை ரத்தம் சொட்ட சொட்ட கையில் ஏந்தியடி. மறுக்கையில் சிகரெட்டை புகைப்பிடித்தபடியான காட்சிகள் அமைந்துள்ளது. கிளிம்ப்ஸ் வீடியோ மிகவும் மாஸாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேதம் படத்தை தொடர்ந்து இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் இரண்டாம் முறை அனுஷ்கா நடித்துள்ளார். இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

SCROLL FOR NEXT