மொழியை கற்று நன்றாக நடித்து எனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிய பிறகு மலையாளத்திற்கு திரும்பி வர முடிவு செய்தேன் என்றார்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்திற்கு பிறகு அவர் சந்தித்த டிரோல்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமா என்பது என் ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உலகமாக இருந்தது. அதனால் தான் நான் அதை விரும்பவில்லை. பிரேமம் படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு அறிவிப்பை பார்த்து என் தோழி எனக்கு அந்த புகைப்படங்களை அனுப்பினார். நான் அந்த தேர்வில் கலந்து கொண்டேன். படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் என் நண்பர்களிடம் சொல்லவில்லை. காரணம் நான் நடித்த கேரக்டர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என நினைத்து அவர்களிடம் பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன். பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்ததால் என் கேரக்டர் சிறியதாக இருந்தது. இதனால் நான் நிறைய கேலிக்கு ஆளாகினேன்.
அந்த நேரத்தில் தான் டிரோல்கள் ஆரம்பித்தன. அந்த வயதில் அதை நினைத்து உடைந்து போனேன். என் பெற்றோருக்கு சினிமா உலகத்தை பற்றி தெரியாததால் எனக்கு அவர்களால் எப்படி ஆறுதல் சொல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மலையாள படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்த போது தெலுங்கில் இருந்து ஸ்ரீவிக்ரம் அழைத்தார்.
அதனால் நான் தெலுங்குக்கு சென்றேன். மொழியை கற்று நன்றாக நடித்து எனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிய பிறகு மலையாளத்திற்கு திரும்பி வர முடிவு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.