சினிமா செய்திகள்

அஞ்சுகுரியன் ‘மசாஜ்’ செலவு ரூ.7.25 லட்சம்

மசாஜ் காட்சிகள் கோடை வெயிலுக்கு குளுமையாக இருந்தாலும் மசாஜ் செய்வதற்கு அவர் கொடுத்த கட்டணம்தான் ‘அம்மாடியோவ்’ என்று கேட்க வைக்கிறது.

கோடை வெயிலை சமாளிக்க திரை உலக பிரபலங்கள் பலர் குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். கடற்கரை தீவுகளில் பிகினி உடை அணிந்தபடி அவர்கள் விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரை உலகில் பிரபல நடிகையான அஞ்சு குரியன் கோடையை கொண்டாட பாலி தீவிற்கு சென்றுள்ளார். தீவு பகுதியில் அஞ்சு குரியன் மசாஜ் செய்யும் வீடியோ காட்சிகளை பகிர்ந்துள்ளார். மசாஜ் காட்சிகள் கோடை வெயிலுக்கு குளுமையாக இருந்தாலும் மசாஜ் செய்வதற்கு அவர் கொடுத்த கட்டணம்தான் ‘அம்மாடியோவ்’ என்று கேட்க வைக்கிறது.

பாலி தீவில் மசாஜ் செய்ய அவர் செலவு செய்தது எவ்வளவு தெரியுமா? ரூ.7.25 லட்சம். இந்த கட்டணத்தை அஞ்சு குரியன் ரசீதுடன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். விலையை கேட்ட ரசிகர்கள் ‘அம்மாடியோவ்’ என கதற தொடங்கி உள்ளனர்.