சினிமா செய்திகள்

சென்னையில் எனக்கு பிடித்த சைவ உணவகம் - இசையமைப்பாளர் அனிருத்

கிரீஸில் கடந்த நவம்பர் 11 அன்று, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர்களின் திருமணம் நடைபெற்றது.

சென்னையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், தனக்கு பிடித்தமான ஆந்திர உணவுகளை அனிருத் பகிர்ந்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11 அன்று, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர்களின் திருமணம் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதையடுத்து வரும் நவம்பர் 21 அன்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் சைவ உணவு பிரியரான அனிருத், தனக்கு பிடித்தமான ஆந்திர உணவு வகைகளை தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அனைவரும் சென்று பார்க்க பரிந்துரைக்கும் உணவகங்கள் எவை என அனிருத்திடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அப்போது இசையமைப்பாளர் அனிருத், நேஷனல் லாட்ஜ் என்ற உணவகத்தின் பெயரை குறிப்பிட்டார்.

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள இந்த உணவகம், முற்றிலும் சைவ உணவுகளை வழங்கி வருகிறது. இந்த உணவகத்தில் காரசாரமான ஆந்திர உணவுகள் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

ஜார்ஜ்டவுன் பகுதியில் கோவிந்தப்பா நாயக்கன் தெருவில் அமைந்துள்ள நேஷனல் லாட்ஜ் உணவகம், சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

இந்த உணவகத்தில் தாலிம்பு (வறுத்த காய்கறி உணவு), அப்பளம், பருப்பு, சட்னி மற்றும் ரய்தா ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பருப்பு பொடி, ரசம், புலுசு மற்றும் தயிர் சாதம், பொறித்த மிளகாய் போன்ற உணவுகளும் பிரபலமான உணவாக விற்பனையாகி வருகிறது.

SCROLL FOR NEXT