தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக அசைக்க முடியாத இசை அரசனாக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு சவாலாக, தற்போது ‘கட்சி சேரா’, ‘ஆசா கூட’ போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இளம் இசை கலைஞராக சாய் அபயங்கர் உருவெடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தற்போது இவ்விருவரின் பிரம்மாண்ட திரைப்படப் பட்டியல்கள் ஒப்பிடப்பட்டு, சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
அனிருத் ரவிச்சந்தர்: உச்ச நட்சத்திரங்களின் தேர்வாகத் தொடரும் ‘ராக்ஸ்டார்’ தனது அசுர வேகப் பயணத்தைத் தொடரும் அனிருத், தென்னிந்தியாவின் முன்னணி உச்ச நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் கைகோர்த்துள்ளார்.
திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 படத்தற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
ஷாருக்கான், அல்லு அர்ஜுன், யஷ் மற்றும் நானி ஆகியோரின் மெகா பட்ஜெட் படங்களுக்குப் பின்னணி இசை சேர்க்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கும் அனிருத்தின் அதிரடி இசை பலமாக அமையவுள்ளது. மேலும், சிலம்பரசன் மற்றும் கார்த்தி படங்களும் இவரது வசம் உள்ளன.
தனது அசாத்திய மெலடிகள் மற்றும் ட்ரெண்டியான பீட்டுகள் மூலம் முன்னணி நடிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சாய் அபயங்கர். இவரது தற்போதைய லைன்-அப் கோலிவுட்டையே வியக்க வைத்துள்ளது.
டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத சூர்யா-48 படத்திற்கும், தனுஷ் நடிக்கும் 'D55' ஆகிய பிரம்மாண்ட படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் ஒப்பந்தமாகியிருப்பது இவரது கேரியரில் மிகப்பெரிய மைல்கல்.
கார்த்தியின் மார்ஷல், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் பென்ஸ் , சிலம்பரசன் STR 49, துருவ் விக்ரம், விஜய் சேதுபதி மற்றும் மமிதா பைஜு இணையும் படங்கள் என நீண்ட பட்டியலைத் தன் கைவசம் வைத்துள்ளார்.
அனிருத் தனது அசைக்க முடியாத அனுபவத்தாலும், சாய் அபயங்கர் தனது புத்தம் புதிய இசைப் பாணியாலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி ரசிகர்களுக்கு ஒரு செவிவிருந்தாக அமையப் போவது உறுதி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.