ஜி.வி.பிரகாஷ் குமார், மாளவிகா மனோஜ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அன்புடன் மகி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் ஜி.வி. நடிக்கிறார். ‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதி, இயக்கும் இப்படத்தை லார்க் ஸ்டூடியோஸ், பாரலெல் யூனிவர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜி.வி.பிரகாஷ், குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
தயாரிப்பு மட்டுமின்றி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார்.
பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், சன் டிவி தொகுப்பாளர் ராகேஷ் மற்றும் காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் படம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.